முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அடங்கிய வாகனம் களனிகம வீதி சோதனை சாவடியில் வைத்து பரிசோதனை செய்யாமல் விடுவிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(01) இடம்பெற்ற ஆயுர்வேத சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தேவை
அவர் மேலும் உரையாற்றியதாவது, ”உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் அரசியல் தேவைக்காகவே நடத்தப்பட்டது என்பதற்கு பல விடயங்களை குறிப்பிடலாம்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்: மைத்திரி, கருணா, பிள்ளையான் மூடி மறைக்கும் உண்மைகள்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்: மைத்திரி, கருணா, பிள்ளையான் மூடி மறைக்கும் உண்மைகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

தற்கொலை குண்டுதாரியான ஜமீலின் வீட்டுக்கு சி.ஐ.டி.யினர் சென்றமை, மாத்தறை பொடி சஹ்ரான், சொனிக் என்ற சொல், அபூபக்கர், குண்டுத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அடங்கிய வாகனம் களனிகம வீதி சோதனை சாவடியில் வைத்து பரிசோதனை செய்யாமல் விடுவிக்கப்பட்டமை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Easter Terror Attack Maithri Speech Important News

அத்துடன் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் தகவல் கிடைத்ததாக பிரதி காவல்துறை மா அதிபர் நிலந்த ஜயவர்தன குறிப்பிட்டுள்ளமை உள்ளிட்ட பல காரணிகள் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளன.

பிரதான சூத்திரதாரி
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவத்தால் 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் .500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தார்கள். பலர் இன்றும் படுக்கையில் விசேட தேவையுடையவர்களாக உள்ளார்கள்.

அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : புத்தாண்டுக்கு முன் வழங்கப்படவுள்ள கொடுப்பனவு

அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : புத்தாண்டுக்கு முன் வழங்கப்படவுள்ள கொடுப்பனவு

பிரதான சூத்திரதாரி

இவர்களின் நிலையை கண்டு மைத்திரிபால சிறிசேனவுக்கு மனவேதனை என்பதொன்று இல்லையா?

இந்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று மைத்திரிபால சிறிசேன சிறுபிள்ளை போல் பேசுகிறார்.

உண்மையை மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்த அவருக்கு தற்றுணிவு கிடையாது.

அரசியல் நோக்கத்துக்காகவே குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது பிரதான சூத்திரதாரியும் அரசியல் நோக்கத்துக்காவே பாதுகாக்கப்படுகிறார்.”என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்