கடுமையான வானிலை காரணமாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு கிழக்குப் பாதையின் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்டவாளங்கள் மூழ்கியுள்ளன.
தொடருந்து சேவைகள் இரத்து
இதனால் இன்று திட்டமிடப்பட்டிருந்த ஆறு நீண்ட தூர நகரங்களுக்கு இடையேயான மற்றும் இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
பயணிகள் தகவலறிந்து மாற்று பயண ஏற்பாடுகளைச் செய்யுமாறு தொடருந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மோசமான வானிலை காரணமாக மலையக தொடருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
