Home இலங்கை அரசியல் வரவு செலவு திட்டத்தில் கல்விக்கும் சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம்: அமைச்சர் விளக்கம்

வரவு செலவு திட்டத்தில் கல்விக்கும் சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம்: அமைச்சர் விளக்கம்

0

இம்முறை வரவு செலவு திட்டத்தில் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக
ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் சுகாதாரம் தொடர்பான
விடயங்கள் பேசப்படும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“வடக்கு மாகாணத்தில் எதிர்கால திட்டமிடல் இல்லாமல் உள்ளமை கவலை. நாங்கள்
எதிர்காலம் தொடர்பில் திட்டமிடல்களை தயாரிக்க வேண்டும். அவ்வாறான
திட்டமிடல்கள் மூலமே முன்னேற்றங்களை மேற்கொள்ள முடியும்.

பாதீட்டில் அதிக நிதி

சுகாதாரம் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். குறைபாடுகளை
நிவர்த்தி செய்ய வேண்டும். வரலாற்றில் என்றும் இல்லாதவாறு இம்முறை கல்விக்கும், சுகாதாரத்துக்கும்
பாதீட்டில் அதிக நிதி ஒதுப்பப்படவுள்ளது.

கிடைக்கவுள்ள பாரிய நிதி மூலம் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
அவ்வாறான குறைபாடுகளை அடையாளம் கண்டு அதனை தீர்க்கும் திட்டங்களை தயாரிக்க
வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version