ஐபிசி தமிழ் பெருமையோடு வழங்கும் பொம்மை திரைப்படம் இன்னும் சில நாட்களில் நாடளாவிய திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.
ஐபிசி தமிழின் தயாரிப்பில் தாயகத்தில் உருவாக்கப்பட்டுள்ள பொம்மை திரைப்படம் எதிர்வரும் 18ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சிறப்புக் காட்சியாக வெளியிடப்படும்.
மேலும், 19ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து திரையரங்குகளிலும் பொம்மை திரைப்படத்தைக் கண்டு களிக்க முடியும்.
சிறப்புக் காட்சி வெளியீடு
இதன் முன்னோடி நிகழ்வாக நேற்றையதினம் கொழும்பு PVR திரையரங்கில் சிறப்புக் காட்சி வெளியிடப்பட்டது.
ஐபிசி தமிழின் தயாரிப்பில், நவயுகா குகராஜின் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
தாயக கலைஞர்களின் படைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை தயாரித்து வழங்குவதில் ஐபிசி தமிழ் பெருமை கொள்கிறது.
https://www.youtube.com/embed/SDZCCPcfK_k
