Home இலங்கை சமூகம் சுவிஸில் கால்பந்தாட்டத்தில் ஈழத்தமிழனின் சாதனை

சுவிஸில் கால்பந்தாட்டத்தில் ஈழத்தமிழனின் சாதனை

0

சுவிட்சர்லாந்தில் நடைபெறும் கால்பந்தாட்ட போட்டிகளில் ஈழத் தமிழரான இளைஞர் அஸ்வின் பாலரூபன் தனது அபார திறமையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இலங்கை வம்சாவளியைக் கொண்ட அஸ்வின், சுவிஸ் செலஞ்ச் லீக் தொடரில் எப்.சி. துன் (FC Thun) கழகத்திற்காக விளையாடி, சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றார்.

ஐரோப்பிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட போட்டித் தொடரில் எப்.சீ துன் கால்பந்தாட்டக் கழகம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

முக்கிய போட்டி

தனது அணிக்காக பல்வேறு முக்கிய போட்டிகளில் அதிரடி விளையாட்டைக் காண்பித்த அஸ்வின், சுவிட்சர்லாந்தில் உள்ள பல கழக நிலை போட்டிகளில் முக்கியமான வீரராக திகழ்கிறார்.

அவரின் சாதனை, ஈழத் தமிழ் இளைஞர்களின் விளையாட்டு திறனை உலகளவில் வெளிக்கொணரும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version