Home இலங்கை சமூகம் திருகோணமலையில் பொலித்தீன் இல்லாத சூழலை உருவாக்கும் முயற்சி ஆரம்பம்

திருகோணமலையில் பொலித்தீன் இல்லாத சூழலை உருவாக்கும் முயற்சி ஆரம்பம்

0

திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் இல்லா சூழல் ஒன்றை
உருவாக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு நேற்று(24) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார வழிகாட்டுதலுக்கிணங்க மாவட்ட சமுர்த்தி முகாமையாளரும் நலன்புரி சங்க
தலைவருமாகிய எச்.சஞ்ஜீவ உட்பட நலன்புரி சங்க குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

இதன்போது சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன்
பொருட்கள் திருகோணமலை மீள்சுழற்சி மையத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

சிரமதான நடவடிக்கை

இதன் மூலம்,
நலன்புரி சங்கத்தின் நிதிக்கு பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பும்
உருவாக்கப்பட்டது.

நலன்புரிச் சங்கம் இந்தத் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தத்
திட்டமிட்டுள்ளது.

அதே நேரத்தில், டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தம்
செய்வதற்கான சிரமதான நடவடிக்கையும் இதன்போது மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட பதவிநிலை
உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து
கொண்டனர்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025

NO COMMENTS

Exit mobile version