Home இலங்கை சமூகம் புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சையை பிராந்திய மட்டத்தில் விஸ்தரிக்க நடவடிக்கை

புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சையை பிராந்திய மட்டத்தில் விஸ்தரிக்க நடவடிக்கை

0

புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை பிராந்திய மட்டத்தில் விஸ்தரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன் பிரகாரம் அநுராதபுர, குருணாகல், பதுளை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்ட மருத்துவமனைகளில் விரைவில் புற்றுநோயாளிகளுக்கான கதிர் சிகிச்சை ஆரம்பிக்கப்படவுள்ளது.

உயர்தர கதிர்சிகிச்சை

அதன் மூலம் புற்றுநோயாளிகள் கதிர் சிகிச்சைக்காக தூரப் பிரயாணம் செய்து கொழும்புக்கு வருவதற்குப் பதிலாக தங்கள் வசிப்பிடங்களுக்கு அண்மையில் உள்ள மருத்துவமனைகளில் அதற்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தச் செயற்பாட்டின் ஆரம்ப கட்டமாக மேற்குறித்த மருத்துவமனைகளுக்கு உயர்தர கதிர்சிகிச்சை உபகரணங்களைத் தருவிப்பதற்கான உடன்படிக்கையொன்று நேற்று சுகாதார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version