Home இலங்கை சமூகம் யாழில் பரிதாபமாக பலியான முதியவர் : 27 வயது இளைஞர் கைது

யாழில் பரிதாபமாக பலியான முதியவர் : 27 வயது இளைஞர் கைது

0

யாழில் உழவு இயந்திரத்துடன் மோதி  62 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலாலி கிழக்கு வசாவிளான் பகுதியினை முதியவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்

குறித்த விபத்து இன்று (12) இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பலாலி வீதி வடக்கு புன்னாலை கட்டுவன் முகவரியில்
அமைந்துள்ள புன்னாலை கட்டுவன் சித்திவிநாயகர் பாடசாலைக்கு அருகாமையில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த பகுதியில் பலாலியில் இருந்து யாழ்பாணம் நோக்கிய திசையில் வீதியின் இடது பக்கமாக நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன், பின்பக்கமாக மோட்டார் வாகனத்தில் வருகை
தந்த குறித்த முதியவர் மோதியே உயிரிழந்துள்ளார்.

சந்தேகத்தின்
அடிப்படையில் உழவு இயந்திரத்தின் சாரதியான 27 வயது இளைஞர் ஒருவரை சுன்னாகம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முதியவரின் உடலம் மேலதிக விசாரணைகளுக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version