யாழ். அராலியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று முன்தினம்(6) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கந்தையா
ஜெயரத்தினம் (வயது 74) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த 1ஆம் அரைக்கும் ஆலையில் மிளகாய் தூள் திரித்துவிட்டு துவிச்சக்கர
வண்டியில் வீதியால் சென்றுகொண்டிருந்தார்.
இதன்போது அராலி மத்தி சமுர்த்தி
வங்கிக்கு அருகேயுள்ள கிளை வீதிக்குள் துவிச்சக்கர வண்டியை திருப்புவதற்கு
முயற்சித்தவேளை திடீரென பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
சம்பவித்துள்ளது.
விசாரணை
இதனையடுத்து, குறித்த முதியவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.
விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை
வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
