Home இலங்கை சமூகம் யாழ். கரவெட்டியில் தீயில் கருகி முதியவர் உயிரிழப்பு

யாழ். கரவெட்டியில் தீயில் கருகி முதியவர் உயிரிழப்பு

0

நுளம்புக்கு புகை மூட்டிய சமயம் ஆடையில் தீப்பிடித்து உடல் கருகி முதியவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ் (Jaffna) கரவெட்டி மேற்கு – கவுடாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த
சண்முகம் பொன்னம்மா (வயது 81) என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் விசாரணை

தனிமையில் வசித்து வந்த அவர் நுளம்புக்கு தீ மூட்டியபோது
அவரது ஆடையில் தீ பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் தொடர்பில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன்
விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version