Home இலங்கை சமூகம் மட்டக்களப்பில் இருந்து சென்ற தொடருந்துடன் யானை மோதி உயிரிழப்பு

மட்டக்களப்பில் இருந்து சென்ற தொடருந்துடன் யானை மோதி உயிரிழப்பு

0

மட்டக்களப்பில் இருந்து மாகோ நோக்கி பிரயாணித்த தொடருந்துடன் வெலிகந்தை பகுதிக்கும் அசேலபுர பகுதிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் காட்டு
யானை ஒன்று மோதி உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (21.10.2025) பிற்பகல்
இடம்பெற்றுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் தாங்கிகள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்லும் தொடருந்து, சம்பவ தினமான நேற்று பகல் 2.15 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து மாகோ நோக்கி
பிரயாணித்த போதே யானை மோதி உயிரிழந்துள்ளது.

புதைக்கும் நடவடிக்கை

இவ்வாறு உயிரிழந்த யானையை மீட்டு அதனை புதைப்பதற்கான நடவடிக்கையை வெலிகந்தை
வனவிலங்கு பரிபாலன சபையினர் முன்னெடுத்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version