Home இலங்கை சமூகம் எல்ல வீக்கெண்ட் எக்ஸ்பிரஸ் சேவை அறிமுகம்

எல்ல வீக்கெண்ட் எக்ஸ்பிரஸ் சேவை அறிமுகம்

0

சுற்றுலாவை மேம்படுத்தவும், நீண்ட தூர பயண வசதியை மேம்படுத்தவும்,
கொழும்புக்கும் பதுளைக்கும் இடையே சிறப்பு வார இறுதி தொடருந்து சேவையான எல்ல
வீக்கெண்ட் எக்ஸ்பிரஸ் சேவையை தொடருந்து திணைக்களம் அறிமுகப்படுத்துகிறது.

இந்த புதிய சேவை அடுத்த சனிக்கிழமை 16ஆம் திகதி காலை 5:30 மணிக்கு கொழும்பு
கோட்டையில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 புதிய சேவை

பின்னர் அது ஞாயிற்றுக்கிழமை 17 ஆம் திகதி பிற்பகல் 1:45 மணிக்கு பதுளையில்
இருந்து புறப்பட்டு, அதே நாளில் கொழும்பு கோட்டையை வந்தடையும்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த சேவை
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version