Home தொழில்நுட்பம் மஸ்க்கின் Grok குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்.. விசாரணைகள் ஆரம்பம்

மஸ்க்கின் Grok குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்.. விசாரணைகள் ஆரம்பம்

0

ஈலோன் மஸ்க்கின் ‘xAI’ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘Grok’ எனும் செயற்கை
நுண்ணறிவு (AI) மென்பொருள், சிறுவர்களின் ஆபாசப் படங்களை உருவாக்கப்
பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் தகவல்
ஆணையாளர் அலுவலகம் (ICO) முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

‘X’ (முன்னாள் ட்விட்டர்) தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பம்,
தனிநபர்களின் அனுமதியின்றி அவர்களின் அந்தரங்கப் படங்களை திரிபுபடுத்தி
ஆபாசமாக மாற்ற அனுமதிப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக பிரித்தானியாவின் தகவல் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள
அறிக்கையில், “Grok AI மூலம் சிறுவர்களின் ஆபாசப் படங்கள் உருவாக்கப்படுவதாக
வரும் செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன.

சிறுவர்களுக்குப் பெரும் ஆபத்து 

இது பிரித்தானிய தரவு பாதுகாப்புச்
சட்டங்களை மீறுவதோடு, பொதுமக்களுக்கு, குறிப்பாக சிறுவர்களுக்குப் பெரும்
ஆபத்தை விளைவிக்கும் செயலாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பாரிஸில் உள்ள ‘X’ அலுவலகங்களில்
பிரெஞ்சு சட்டத்தரணிகள் அதிரடி சோதனை நடத்திய அதே நாளில் இந்த விசாரணை
அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

மறுபுறம், பிரித்தானிய ஊடக ஒழுங்குபடுத்தல ஆணைக்குழுவான ‘ஒஃப்கொம்’ (Ofcom),
ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ‘X’ நிறுவனம் தனது கடமைகளைச் சரியாகச்
செய்கிறதா என்று ஏற்கனவே விசாரித்து வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மனி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் Grok AIன்
செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டும்
ஆபாசப் படங்களை உருவாக்கும் வசதிகளைக் கட்டுப்படுத்தியுள்ளதாக ‘xAI’ நிறுவனம்
தெரிவித்துள்ளது.

Source: https://tamilwin.com/article/elon-musk-artificial-intelligence-ai-software-1770145093

NO COMMENTS

Exit mobile version