முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: புதிய வரலாற்று சாதனை படைக்கபோகும் இந்திய கிரிக்கெட் வீரர்!

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதன் மூலம் மற்றொரு மைல்கல்லைத் தொட உள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25 ஆம் திகதி ஆரம்பமாவுள்ளது.

இந்த போட்டிகளில் விளையாடுவதன் மூலம் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஷ்வின் புதியசாதனையை படைக்கவுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ள விராட் கோலி: வெளியாகியுள்ள காரணம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ள விராட் கோலி: வெளியாகியுள்ள காரணம்

சாதனை படைக்கபோகும் அஷ்வின்

இதுவரை அவர் 95 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 490 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

இந்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: புதிய வரலாற்று சாதனை படைக்கபோகும் இந்திய கிரிக்கெட் வீரர்! | Eng Vs India Test Aswin Virat Gill Rohith Cricket

இன்னும் 10 விக்கெட்கள் எடுத்தால் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில் இணைந்து சாதனை படைப்பார்.

சொந்த மண்ணில் அவரின் சிறந்த பந்து வீச்சை கருத்தில் கொண்டு, ஐதராபாத்தில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 500 விக்கெட்டுகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பத்தின் உச்சம்: கண்களை சிமிட்டி புன்னகைக்கும் அயோத்தி ராமர்

தொழில்நுட்பத்தின் உச்சம்: கண்களை சிமிட்டி புன்னகைக்கும் அயோத்தி ராமர்

அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்

மேலும், 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அஸ்வின், இன்று வரை இந்திய அணியில் விளையாடி வருகின்றார்.

இந்நிலையில், அஸ்வின் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை நிறைவு செய்வதை தவிர, 100 டெஸ்ட் போட்டிகளையும் நிறைவு செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: புதிய வரலாற்று சாதனை படைக்கபோகும் இந்திய கிரிக்கெட் வீரர்! | Eng Vs India Test Aswin Virat Gill Rohith Cricket

இதுவரை டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரராக அனில் கும்ப்ளே முன்னிலையில் உள்ளார்.

இவர் 132 டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

அவர் ஓய்வு பெற்றதனால், இன்னும் 4-5 ஆண்டுகள் விளையாடினால் அஸ்வின் கும்ளேவின் சாதனையை முறியடிக்க முடியும் என கூறப்படுகின்றது.

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்களில் அனில் கும்ப்ளே, ஆர் அஷ்வினை தொடர்ந்து கபில்தேவ் உள்ளார்.

"விரைவில் இந்தியா முழுவதையும் ராம ராஜ்ஜியமாக மாற்றுவோம்" தமிழக ஆளுநர்

“விரைவில் இந்தியா முழுவதையும் ராம ராஜ்ஜியமாக மாற்றுவோம்” தமிழக ஆளுநர்

இந்தியா  இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

இவர் 417விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.அவரை தொடர்ந்து ஹர்பஜன் சிங் உள்ளதோடு தலா 311 விக்கெட்களுடன், இஷாந்த் சர்மா மற்றும் ஜாகீர் கான் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இந்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: புதிய வரலாற்று சாதனை படைக்கபோகும் இந்திய கிரிக்கெட் வீரர்! | Eng Vs India Test Aswin Virat Gill Rohith Cricket

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1வது டெஸ்ட்: ஜனவரி 25–29, ஹைதராபாத்
2வது டெஸ்ட்: பிப்ரவரி 2-6, விசாகப்பட்டினம்
3வது டெஸ்ட்: பிப்ரவரி 15-19, ராஜ்கோட்
4வது டெஸ்ட்: பிப்ரவரி 23-27, ராஞ்சி
5வது டெஸ்ட்: மார்ச் 7–11, தர்மசாலா ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா , சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், கேஎஸ் பாரத் (WK), துருவ் ஜூரல் (WK), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (WC), அவேஷ் கான் ஆகியோர் விளையாடவுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்