மன்னார் (Mannar) மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி இடம்பெற்றதுடன் தேவாலயங்களுக்கு பாதுகாப்புக்கு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார்
பேராலயத்தில் நேற்று (19) சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு இடம்பெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம்
ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலியை கூட்டுத்
திருப்பலியாக ஒப்புக் கொடுத்தனர்.
ஆயிரக்கணக்கான மக்கள்
திருவிழா திருப்பலி இடம்பெற்ற போது ஆலயத்தை சூழ பாதுகாப்புக்கள்
பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்போது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து
கொண்டிருந்தனர்.
இதேவேளை இன்று (20 )காலையும் திருவிழா திருப்பலி ஆலயங்களில் ஒப்புக்
கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
