Home இலங்கை அரசியல் ஈ.பி.டி.பியுடன் இணைய துடிக்கும் தமிழரசு கட்சி..! இன்று அவசர சந்திப்பு

ஈ.பி.டி.பியுடன் இணைய துடிக்கும் தமிழரசு கட்சி..! இன்று அவசர சந்திப்பு

0

உள்ளூராட்சி சபைகளில் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் (ஈ. பி. டி. பி) சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை நடைபெறும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ. வீ.கே.சிவஞானம் யாழிலிருந்து வெளிவரும் பத்திரிக்கைக்கு உறுதிப்படுத்தி உள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இதனிடையே யாழ். மாநகர சபையில் ஜே.வி.பியுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுகளை அவர் மறுத்துள்ளார்.

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி

இவ்வாறு வெளியான தகவல்கள் “கடும் கற்பனை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச்சுக்கு வருமாறு டக்ளஸ் தேவானந்தாவுக்கு தான் குறுந்தகவல் (எஸ்.எம். எஸ்) மூலமாக அழைப்பு விடுத்திருந்தார் என்றும் அதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார் என்று சீ. வீ. கே.சிவஞானம் தெரிவித்தார்.

மேலும், இந்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை மாலை நடைபெறக்கூடும் என்றும் சந்திப்புக்கான நேரம்
இடம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version