Home இலங்கை அரசியல் ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பெருந்தோட்ட மக்கள்

ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பெருந்தோட்ட மக்கள்

0

 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், அரசாங்கத்திற்கும் ஆசி வேண்டி பெருந்தொட்ட மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

தலைவாக்கலை அகரபத்தனை பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்தோட்ட மக்கள் இவ்வாறு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் 1750 ரூபாவாக உயர்த்தப்பட்டமை தொடர்பில் நன்றி பாராட்டும் நோக்கில் இந்த பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த சம்பள அதிகரிப்பு தொடர்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நோக்கில் பாற்சோறு சமைத்து தங்களது மகிழ்ச்சியை தோட்டத் தொழிலாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

வரலாற்றில் முதல் தடவையாக போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் இன்றி தங்களது மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு ஜனாதிபதி சம்பளத்தை அதிகரித்துள்ளார் என குறித்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 2028 ஆம் ஆண்டின் பின்னரும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க நியமிப்பதற்கு பெருந்தோட்ட மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள் என அகரபத்தன தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version