முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்தவர்களே இன்று சங்கை ஊதுகிறார்கள் : முன்னாள் அமைச்சர் விசனம்

தமிழரசுக் கட்சியில் இருந்து பிரிந்தவர்களே இன்று சங்கை ஊதிக்கொண்டு
திரிகிறார்கள் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் இன்று
(14) காலை கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட
கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் இடையில் கலந்துரையாடல்
இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மக்களுக்கான பிரச்சனைகள்

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கொழும்பில் ஏன் நீங்கள் போட்டி போடுகின்றீர்கள் என சிலர் கேட்டிருந்தார்கள் நீண்டகாலமாக ஐக்கியபட வேண்டும், தமிழ் மக்களின் ஒற்றுமையை தென்னிலங்கைக்கு,
இந்தியாவிற்கு (India) மற்றும் சர்வதேசத்திற்கு காட்ட வேண்டும் அப்போதுதான் மக்களின்
பிரச்சினைகளை தீர்க்கலாம் என கூறிகொண்டிருக்கிறார்கள்.

இது நேற்று இன்றில்லை 1974 ஆம் ஆண்டு தொடக்கம் மக்களை உசுப்பேத்தி விடுவதற்காக
கோஷங்களாக அரசியலில் திட்டங்களாக மற்றும் கருத்தாக இருந்திருக்கின்றது.

தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்தவர்களே இன்று சங்கை ஊதுகிறார்கள் : முன்னாள் அமைச்சர் விசனம் | Ex Minister Douglas Devananda Alleges Against Itak

ஆனால், 74 ஆம் ஆண்டில் இருந்து இக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் தமிழ்
மக்களுக்கான பிரச்சனைகள் தீர்ந்ததாக இல்லை தீரா பிரச்சினையாக, பிரச்சினை
அதிகரித்துதான் இருக்கின்றது.

இடப்பெயர்வு, சொத்துக்கள், உயிர்களை இழக்கவேண்டி வந்திருக்கின்றது அங்கவீனம் மற்றும் இரத்தம் சிந்துதல் இவ்வாறு பல துன்பங்களுக்கு மத்தியிலே இந்த
கோஷங்களை எழுப்பியிருக்கின்றார்கள்.

கட்சியின் கலந்துரையாடல்

இது ஒரு பிழையான சுயநலமான கோஷமாக தான்
இருந்திருக்கின்றது தமிழரசு கட்சியினை எடுத்தால் அது இன்று மூன்று கட்சிகளாக
பிரிக்கப்பட்டுள்ளது தமிழரசுகட்சி, ஜனநாயக தமிழரசுகட்சி மற்றும் சுஜேட்சை என பிரிந்திருக்கிறார்கள்.

தமிழரசு கட்சி என இருப்பவர்களே இரண்டு
அணியாக பிரிந்து செயல்படுகின்றார்கள் ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரம் இருக்க
வேண்டும் அதுதான் அடிப்படை ஆனால் இங்கு நல்ல நோக்கத்திற்காக அந்த
சுதந்திரத்தினை பயன்படுத்தாமல் அவர்கள் தம் சுயலாபத்திற்காக தான்
பயன்படுத்துகின்றார்கள்.

தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்தவர்களே இன்று சங்கை ஊதுகிறார்கள் : முன்னாள் அமைச்சர் விசனம் | Ex Minister Douglas Devananda Alleges Against Itak

அதனைவிட தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் இன்று சங்கை ஊதிக்கொண்டு
வந்திருக்கிறார்கள் அந்த சின்னத்தில் இருப்பவர்கள் கூறியிருக்கின்றார்கள்
நேற்றைய தின தமிழரசு கட்சியின் கலந்துரையாடலில் சங்கு சின்னத்தை
கொண்டுவாறவர்கள் கொலை, கொள்ளை மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் என அதனாலே நாம்
வெளியில் விட்டோம் என ஆனால் அது உண்மை அல்ல சுயலாபத்திற்காகவே
இருக்கின்றார்கள்.

ஆனால் ஈபிடிபி அப்படி அல்ல ஈபிடிபி அதில் இருந்து மாறுபட்டது ஈபிடிபி
கொள்கைகளை நீண்டகாலமாக முன்வைத்து அதனை அடைவதற்கான வேலைத்திட்டங்களை
முன்வைத்து வருகின்றது.

வேட்பாளர் பட்டியல்

இன்றும் அதை நோக்கியே செயற்பட்டு வருகின்றது ஈபிடிபிக்கு போதிய ஆசனங்கள் இல்லை போதிய ஆசனங்கள் இருக்குமாக இருந்தால்
மக்களுடைய அபிவிருத்திக்கான அரசியல் உரிமைக்கான தீர்வு என மூன்று வகையான
பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்.

எது எவ்வாறு இருந்தாலும் தேசிய நல்லிணக்கத்தினூடாகவே இணக்க அரசியலின் ஊடாக
தான் நாம் முன்னெடுப்போம் என்னுடைய முகநூலில் கொழும்பு வேட்பாளர் பட்டியல் பற்றி விமர்சனம் ஒன்று
ஒருவர் எழுதியிருந்தார்.

தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்தவர்களே இன்று சங்கை ஊதுகிறார்கள் : முன்னாள் அமைச்சர் விசனம் | Ex Minister Douglas Devananda Alleges Against Itak

அவர் கூறியிருந்தார் நீங்கள் விமர்சனத்திற்கு
அப்பால் மக்களுக்கு சிறந்த சேவையாற்றிருக்கின்றீர்கள் அதனை நாம்
வரவேற்கின்றோம் ஆனால் ஏன் புத்தபிக்குகளை கொழும்பு பட்டியவில்
சேர்த்திருக்கிறீர்கள் என கேட்டிருந்தார்.

ஈபிடிபி 1987 கட்சியில்
ஆரம்பிக்கப்பட்டது இது கல் மண் சுண்ணாம்பு  மற்றும் சீமெந்து இது சேர்ந்த
கொங்கிறீட் கலவை இது இறுகினால் உருக்காகத்தான் இருக்கும்.

அப்பிடிதான்
ஈபிடிபி இருக்குமே ஒளிய அது உதிர்ந்து போகாது என கூறியிருந்தேன் இலங்கை அரசியல் ஊடாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை
தீர்த்திருக்கின்றோம் இன்னும் பல பிரச்சினைகள் இருக்கின்றது அதற்கு தீர்வு காண
வேண்டியிருக்கின்றது.

போதிய ஆசனங்கள்

எங்களுக்கு போதிய ஆசனங்கள் இல்லை ஆகவே இம் முறை நான்
எதிர்பார்கின்றேன் ஐந்து ஆசனங்கள் கிடைக்க வேண்டும் கிடைத்தால் இரண்டு
வருடத்திற்குள் பிரச்சினைகளை தீர்க்கமுடியும் எமக்கு ஐந்து ஆசனங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

இன்று
கூறுகின்றார்கள் டக்ளஸ் தேவானந்தாவின் வாக்கு அசையாது என வேட்புமனுதாக்கல்
செய்து விட்டு எல்லா கட்சிகளும் முடிவுகளுக்காக காத்திருந்த போது சிலர்
கதைத்தார்கள் யாழ் மாவட்டத்தில் ஆறு ஆசனங்கள் அதில் ஒன்றை தவிர மற்றையது
யாருக்கென தெரியாது நான் அதை நம்பவில்லை.

தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்தவர்களே இன்று சங்கை ஊதுகிறார்கள் : முன்னாள் அமைச்சர் விசனம் | Ex Minister Douglas Devananda Alleges Against Itak

எம் உழைப்பு மற்றும் சேவையூடாக எங்கட
கொள்கை ஊடாக மக்கள் அணிதிரண்டு எம்முடன் பயணிக்கவேண்டும் என
கேட்டுகொள்கின்றேனே தவிர வாக்குகளை அபகரிக்க முன்வைக்கவில்லை வேறு கட்சியில் இருபவர்களில் ஒரு உறுப்பினர் ஜனாதிபதியினை
சந்தித்திருக்கிறார்.

அவர் சாராய பார் எடுத்ததாக கதை அதே கட்சியில் இருக்கும்
பிரதான உறுப்பினர் ஜனாதிபதியிடம் கேட்டிருக்கின்றார் பட்டியலை வெளியிட சொல்லி அப்போது சாராய பார் லைசன்ஸ் எடுத்தவர் ஜனாதிபதியிடம் சொல்லியிருக்கின்றார்
பட்டியலை வெளியிட வேண்டாம் என ஆனால் எங்களுக்கும் அரசாங்கத்துக்கும் கடந்த
காலத்தில் இருந்த உறவு மக்கள் நலன் சார்ந்து கொள்கை நிலப்பாட்டிலையே
இருந்தது.

1997ஆம் ஆண்டு சந்திரிக்கா அரசாங்கம் தங்களுக்கு ஆதரவினை கேட்ட
நேரம் எமக்கு அமைச்சு பதவி, பணம் தருகின்றோம் ஆதரவு தரவேண்டும் என ஆனால் நான்
எமக்கு பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என அரசியல் தீர்வு சம்பந்தமாக
தீர்வுவேண்டும் என கூறியிருந்தேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.