Home இலங்கை சமூகம் புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப்பணி

புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப்பணி

0

முல்லைத்தீவில் (Mullaitivu) விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடிய அகழ்வுப்பணி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் இன்றையதினம் (09) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட மந்துவில் பகுதியில்
விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தனியார்
காணியொன்றில் பதுங்கு குழிக்குள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் குறித்த
அகழ்வுப்பணிக்கான ஆயத்த பணி இடம்பெற்று வருகின்றது.

பொறுப்பதிகாரி 

புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர் ஹெரத் தலைமையிலான
காவல்துறையினர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததிருந்தனர்.

இதற்கு அமைய புதுக்குடியிருப்பு காவல்துறையினர், கிளிநொச்சி குண்டு செயலிழக்கும் பிரிவினர், விசேட
அதிரடிப்படையினர் மற்றும் தடயவியல் காவல்துறையினர் இணைந்து குழியினுள் இருக்கும் நீரினை
அகற்றும் பணி இடம்பெற்று வருவதுடன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஜேசிபி
இயந்திரமும் வரவழைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தினை முல்லைத்தீவு நீதவான் பார்வையிட்டதன் பின்னரே அகழ்வுப்பணிகள்
ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில்
ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version