2025 ஆம் ஆண்டில் மதுவரி வருமானம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை மதுவரித் திணைக்களம் (Excise Department of Sri Lanka) தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த ஆண்டில் கடந்த மார்ச் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 61.3 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுவரித் திணைக்களம்
இது கடந்த 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 117 வீத வளர்ச்சியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2025ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 48 பில்லியன் ரூபாய் வருமானம் எதிர்பார்க்கப்பட்டதாகவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

