Home இலங்கை சமூகம் பேரிடரில் சிக்கியுள்ள இலங்கை – பொதுமக்களின் பொறுப்பற்ற செயலால் ஏற்பட்ட உயிரிழப்பு

பேரிடரில் சிக்கியுள்ள இலங்கை – பொதுமக்களின் பொறுப்பற்ற செயலால் ஏற்பட்ட உயிரிழப்பு

0

நாடாளவிய ரீதியில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக அரசாங்கம் திணறி வரும் நிலையில், பொதுமக்கள் சிலரின் பொறுப்பற்ற செயற்பாடு ஆபத்தாக மாறியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் விமானி உயிரிழந்துள்ளார்.

41 வயதான விமானி விங் கொமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேடிக்கை பார்க்கை சென்ற மக்கள்

குறித்த ஹெலிகொப்டர் தரையிறக்குவதற்கு நீண்ட நேரம் முயற்சித்த போதும், அங்கு வேடிக்கை பார்க்கை சென்ற மக்களால் தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கிருந்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தரையிறக்க முயற்சித்த வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

வென்னப்புவ, லுனுவில பாலத்திற்கு அருகில் இருந்த குழுவினருக்கு உணவுப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த மேலும் 4 விமானப்படையினர் தற்போது மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version