Home இலங்கை சமூகம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் குறித்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

சாரதி அனுமதிப் பத்திரங்கள் குறித்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

0

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சாரதி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்க முடியாத சாரதிகளுக்கு, சட்டத் தடைகள் இல்லாமல் வாகனம் ஓட்டுவதற்கு இலங்கை காவல்துறை ஒரு சலுகைக் காலத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் நிலவும் கடுமையான வானிலை மற்றும் இயற்கை பேரிடர் சூழ்நிலை காரணமாக, சாரதி அனுமதிப் பத்திரங்கள் காலாவதியான சாரதிகள் அவற்றைப் புதுப்பிக்க மோட்டார் போக்குவரத்துத் துறைக்குச் செல்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நவம்பர் 25, 2025 முதல் டிசம்பர் 25, 2025 வரை காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கு மோட்டார் போக்குவரத்துத் துறை ஒரு சிறப்பு சலுகைக் காலத்தை வழங்க முடிவு செய்துள்ளது.

போக்குவரத்துச் சட்டங்கள் 

இந்தக் காலகட்டத்தில் காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரத்தை வைத்திருந்து வாகனம் ஓட்டுவது போக்குவரத்துச் சட்டங்களை மீறுவதாகக் கருதப்படாது என்று மோட்டார் போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, சலுகைக் காலத்தில் காலாவதியான உரிமத்துடன் வாகனம் ஓட்டுவது தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது இந்த சூழ்நிலையை கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறு காவல்துறை மா அதிபர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version