Courtesy: Sivaa Mayuri
இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (VAT) முறை திட்டமிட்டு அகற்றுவதற்கு எதிராக தமது கடுமையான ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
எளியமுறை பெறுமதிசேர் முறை அகற்றப்பட்டால், ஏற்றுமதியாளர்கள் தங்கள் கொள்முதல் மீது ஏயுவு வரியை முன்கூட்டியே செலுத்த வேண்டும்.
வணிக நடவடிக்கைகள்
இதன் காரணமாக பணப்புழக்கம் கணிசமாகக் குறைந்து, வணிக நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான மூலதனத்துக்கு பற்றாக்குறை ஏற்படும் என்று இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் அதிகரித்த செலவுகள் மற்றும் சிக்கலான தன்மைகள் இலங்கை ஏற்றுமதியாளர்களின் போட்டித்தன்மையை சிதைத்து, கவர்ச்சிகரமான விலை வழங்குவதை கடினமாக்கும் என ஏற்றுமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக பாரம்பரிய வற் வரி கட்டமைப்பின் கீழ் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ள எளியமுறை வெற்வரியமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
வெற் வரி செலுத்துதல்களை ஒத்திவைத்து, பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறையை எளிதாக்குவதன் மூலம், எளியமுறை வரியமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது.