Home இலங்கை சமூகம் பதில் கணக்காய்வாளர் நாயகத்திற்கு பதவி நீடிப்பு

பதில் கணக்காய்வாளர் நாயகத்திற்கு பதவி நீடிப்பு

0

கணக்காய்வாளர் திணைக்களத்தின் பதில் கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் ஜி.எச்.டி. தர்மபாலவின் சேவை நீடிப்புக்கு அரசியலமைப்புச் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

நேற்று (22.05.2025) பிற்பகல் கூடிய அரசியலமைப்புச் சபை, ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.

ஜனாதிபதியின் முன்மொழிவு 

முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் ஓய்வு பெற்ற பின்னர் 44 நாட்களாக இந்தப் பதவி வெற்றிடமாக உள்ளது.

இந்நிலையில், புதிய கணக்காய்வாளர் நாயகமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்மொழிந்த பெயரை அரசியலமைப்புச் சபை அங்கீகரிக்கவில்லை.

அதன்படி, பதில் கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் ஜி.எச்.டி. தர்மபாலவுக்கு ஆறு மாத கால சேவை நீடிப்பு வழங்குவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரசியலமைப்புச் சபைக்கு முன்வைத்த முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

[XUPNVZL

NO COMMENTS

Exit mobile version