Home இலங்கை சமூகம் இலங்கையை புரட்டிப் போட்ட மழை வெள்ளம்! சடுதியாக உயர்கிறது பலி எண்ணிக்கை

இலங்கையை புரட்டிப் போட்ட மழை வெள்ளம்! சடுதியாக உயர்கிறது பலி எண்ணிக்கை

0

புதிய இணைப்பு

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது.

203 பேரை  இதுவரை காணவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று (29) இரவு 8.00 மணிக்கு மையம் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, 25 மாவட்டங்களைச் சேர்ந்த 234,503 குடும்பங்களைச் சேர்ந்த 833,985 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 34,19 குடும்பங்களைச் சேர்ந்த 122,822 பேர் தற்போது 919 தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு

இன்று மாலை வெளியான தரவுகளின் அடிப்படையில் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153ஆக அதிகரித்துள்ளது. 

மேலும்,  191 பேர் இதுவரையில் காணாமல் போயுள்ளதுடன் அவர்களை தேடும் நடவடிக்கை தொடர்வதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டோர் விபரம்..

இன்று (29) மாலை 6.00 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, 25 மாவட்டங்களைச் சேர்ந்த 217,263 குடும்பங்களைச் சேர்ந்த 774,724 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 27,494 குடும்பங்களைச் சேர்ந்த 100,898 பேர் தற்போது 798 தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version