Home இலங்கை சமூகம் மன்னார் – யாழ்ப்பாணம் வீதியில் பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

மன்னார் – யாழ்ப்பாணம் வீதியில் பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

0

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மல்வத்து ஓயாவின் ஆற்று
வெள்ளம் மன்னார் மாவட்டத்தின் அநேக இடங்களில் பாதிப்பினை ஏற்படுத்தி யுள்ளதாக
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர்
கே.திலீபன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஏ-32   மன்னார் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை செல்லும் வீதி
முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

தேவையற்ற பயணங்கள் வேண்டாம்

குறித்த வீதியூடாக பெரிய மற்றும் சிறிய வாகனங்களில் பயணம் செய்வதை முற்றாக
தவிர்க்குமாறு பயணிகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்..

எனவே பாதுகாப்பை கருத்திற் கொண்டு தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் கோரிக்கை
விடுத்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version