Home இலங்கை சமூகம் வவுனியாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்: இருவர் மரணம்

வவுனியாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்: இருவர் மரணம்

0

வவுனியாவில் கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன்  அதில்
பயணித்த இருவர் மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

ஏ9 வீதி சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் கார் ஒன்று வெள்ளத்தில் அடித்து
செல்லப்பட்டுள்ளதை அவதானித்த கிராம மக்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு
தகவல் வழங்கியுள்ளனர்.

இருவரது சடலங்கள் மீட்பு

குறித்த தகவலினை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இராணுவம் மற்றும் பொலிஸார்
கிராம இளைஞர்களுடன் இணைந்து குறித்த காரினை மீட்டுள்ளனர்.

காரினை மீட்டுள்ளதுடன், காரில் பயணித்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரது
சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.

உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டதுடன்  மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது.

சம்பவத்தில் 51 வயதான குமார செனவிரத்தின என்ற மட்டக்களப்பை சேர்ந்த ஆணும் 38
வயதுடைய காத்தான்குடியைச் சேர்ந்த சேர்ந்த முகமது முஸாபின் சப்ரினா ஆகியோரே
மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version