யாழில் (Jaffna) வீசிய பலத்த காற்று காரணமாக வீடு ஒன்றின் மீது தேக்கு
மரம் முறிந்து விழுந்ததால் வீட்டின் கூரை பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர்
ரி.என்.சூரியராஜா குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சோமஸ்கந்த கல்லூரி வளாகத்தில் காணப்பட்ட தேக்கு மரமானது அருகில் உள்ள வீட்டின்
மீது முறிந்து விழுந்ததாலே இவ்வாறு அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
பலத்த காற்று வீசக்கூடும்
இருப்பினும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இன்றும் மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும், புத்தளம், திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (55-60) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (25) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்ந விடயம் குறிப்பிட்டுள்ளது.
