Home இலங்கை சமூகம் திருகோணமலையில் எரிந்து நாசமான கண் பரிசோதனை நிலையம்

திருகோணமலையில் எரிந்து நாசமான கண் பரிசோதனை நிலையம்

0

திருகோணமலை துறைமுக காவல்துறை பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது
வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள தனியார் கண் பரிசோதனை நிலையம் தீப்பற்றி உள்ளது.

குறித்த சம்பவம் இன்று(06) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மின் ஒழுக்கு காரணமாக குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

மேலதிக விசாரணை

குறித்த கண் பரிசோதனை நிலையத்தின் மேல் மாடி பகுதியில் தங்கியிருந்த
தாதியர்களின் விடுதி அறையும் தீப்பற்றி நாசமாகியுள்ளது.

தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக காவல்துறையினர்
முன்னெடுத்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version