Home இலங்கை சமூகம் வங்கி அட்டைகளால் பேருந்து கட்டணம் செலுத்தும் புதிய வசதி அறிமுகம்

வங்கி அட்டைகளால் பேருந்து கட்டணம் செலுத்தும் புதிய வசதி அறிமுகம்

0

நவம்பர் 24 ஆம் திகதி முதல் வங்கிகளால் வழங்கப்படும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பொதுமக்கள் பேருந்து கட்டணங்களைச் செலுத்த முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (14) நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் பணமில்லா கட்டணங்களைச் செலுத்த முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மின்னணு பற்றுச்சீட்டு

இதேவேளை, மின்னணு  பற்றுச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பேருந்துகளில் இந்த வசதி கிடைக்கும் எனவும் பயணிகள் பணத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக தங்கள் வங்கி அட்டைகளை ஸ்வைப் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்தை நவீனமயமாக்குவதற்கும் தினசரி பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version