கொழும்பில் பொலிஸ் உத்தியோகத்தர் என கூறி பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 14ஆம் திகதி மருதானை பகுதியில் வைத்து இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், தம்மை பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு வீதியில் சென்று கொண்டிருந்த நபரை சோதனையிட்டு சுமார் 02 இலட்சம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி மற்றும் பணப்பையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கொள்ளையர்கள் அட்டகாசம்
குறித்த பொருட்களை பெற்றுக்கொள்ள 35,000 ரூபா பணத்துடன் மருதானை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கொள்ளையர்கள் தப்பிச் சென்றதாக பாதிக்கப்பட்டவர் பொலிஸில் முறையிட்டுள்ளார்.
இதற்கமைய மருதானை பொன்சேகா மாவத்தை பகுதியில் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை மருதானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது கொள்ளையிடப்பட்ட பல பொருட்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸ் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பரிசோதனை செய்யாமல் எந்தவொரு செயற்பாட்டுக்கும் இடங்கொடுக்க வேண்டாம் என நாட்டு மக்களை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.