நடிகர் ரோஹித்
மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் வெளியான ஃபேமிலி மேன் 3 வெப் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் ரோஹத்.
இவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் ஏப்ரல் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை அசாமில் உள்ள கர்பாங்கா காட்டில் ஒரு நீர்வீழ்ச்சி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ரோஹித் உடலில் பல காயங்கள் இருந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.


திருமணத்திற்கு பிறகு வந்த ஸ்பெஷல் டே, Heart Smiley பறக்க விட்ட தொகுப்பாளினி பிரியங்காவின் கணவர்.. என்ன தெரியுமா?
காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ரோஹித் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் நண்பர்களுடன் சுற்றுலா சென்றதாகவும், மாலை அவர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
தற்போது காவல்துறையினர் ரோஹித் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

