அநுராதபுரத்தில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் அநுராதபுரம், எப்பாவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மகா
இலுப்பல்லம பகுதியில் இன்று(24) வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மகா இலுப்பல்லம பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் ஆவார்.
தோட்டத்துக்குள் நுழைந்த யானை
மேற்படி நபர் வாழைத்தோட்டத்துக்குள் நுழைந்த காட்டு யானையை விரட்ட முயன்ற போது
யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று எப்பாவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
