Home உலகம் அமெரிக்காவில் பிரபல தொழிலதிபர் மரணம்: தீவிர விசாரணையில் காவல்துறையினர்

அமெரிக்காவில் பிரபல தொழிலதிபர் மரணம்: தீவிர விசாரணையில் காவல்துறையினர்

0

அமெரிக்காவில் (United States) பிரபல தொழிலதிபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவமானது நியூயார்க் (New York) மாகாணத்தின் மேன்ஹட்டன் நகரில் உள்ள சொகுசு விடுதியில் நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, உயிரிழந்தவர் அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் மைக்கெல் சிலின் என்பவராவர்.

உயிரிழப்பு

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ஜேம்ஸ் மைக்கெல் சிலின் எனும் பிரபல தொழிலதிபர் மேன்ஹட்டன் நகரில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்கி இருந்துள்ளார்.

இந்தநிலையில்,  குறித்த தொழிலதிபர் விடுதியிலுள்ள  20ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீவிர விசாரணை

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகனை மேற்கொண்டுள்ளதுடன் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Source: https://ibctamil.com/article/famous-american-businessman-committed-suicide-1721390439

NO COMMENTS

Exit mobile version