வடமேல் மாகாணத்தின் தெதுரு ஓயா யானைக் கூட்டத்தைச் சேர்ந்த பிரபல யானையொன்று இனம்தெரியாதவர்களினால் கொல்லப்பட்டுள்ளது.
வட மேல்மாகாணத்தின் தெதுரு ஓயா யானைக் கூட்டம் மிகப் பெரும் யானைக் கூட்டமாகும்.
20 வருடங்கள்
அதில் ஏராளம் கொம்பன் யானைகள் உள்ளிட்ட ராட்சத யானைகள் உள்ளன.
இந்நிலையில் குறித்த யானைக் கூட்டத்தைச் சேர்ந்த கல்கமுவ சுமண என்று அடையாளப்படுத்தப்படும் கொம்பன் யானையை இனம் தெரியாதவர்கள் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுமார் 20 வருடங்கள் வயதான குறித்த யானை உள்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற , மூர்க்கத்தனமான யானைகளில் ஒன்றாகும்.
