Home இலங்கை சமூகம் யாழில் மின் ஒழுக்கினால் எரிந்து சேதமான அழகு சாதன விற்பனை நிலையம்

யாழில் மின் ஒழுக்கினால் எரிந்து சேதமான அழகு சாதன விற்பனை நிலையம்

0

மின் ஒழுக்கு காரணமாக யாழ்ப்பாணம் (Jaffna) அச்சுவேலி நகரப் பகுதியில் உள்ள அழகு சாதன
விற்பனை நிலையம் பகுதியளவில் எரிந்து சேதமானது.

விற்பனை நிலையத்தை பூட்டுவதற்கு உரிமையாளர் முயற்சி செய்த பொழுது, திடீரென
விற்பனை நிலையத்தின் பின்பகுதியில் ஏற்பட்ட மின்னொழுக்கு வேகமாக பரவியது.

காவல்துறையினர் விசாரணை

புகை வருவதை கண்ணுற்ற அயல் கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து
தீயினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

மாநகர சபையின் தீயணைப்பு
வாகனமும் விரைந்து வந்து நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.youtube.com/embed/sZr5cfb_Jls

NO COMMENTS

Exit mobile version