Home இலங்கை குற்றம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான தந்தை மற்றும் மகள்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான தந்தை மற்றும் மகள்!

0

மாணிக்கக்கற்களை சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற தந்தையும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில், சுமார் 17,450,875 ரூபாய் மதிப்புள்ள மாணிக்கக்கற்களை மறைத்து வைத்து சீனாவிற்கு கொண்டு செல்ல முயற்சித்த காரணத்திற்காகவே இவர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.

பறிமுதல்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் சுங்க அதிகாரிகளால், நேற்று முன்தினம் இரவு (13) சீன பிரஜைகளான தந்தையும் மகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபரான 45 வயது தந்தையும் அவரது 21 வயது மகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்து வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மாணிக்கக்கற்களில் சந்திரகாந்தி, கோமேதா, அரனுல், வைரோடி மற்றும் பச்சை ஆகியவை அடங்கியுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version