Home இலங்கை சமூகம் திடீரென முறிந்து வீழ்ந்த மரக்கிளை! ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு நேர்ந்த கதி

திடீரென முறிந்து வீழ்ந்த மரக்கிளை! ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு நேர்ந்த கதி

0

பலத்த காற்று காரணமாக மோட்டார் சைக்கிள் மீது மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எத்திலிவெவ மகாஆரகம பகுதியில் இன்று (28) பதிவாகியுள்ளது.

விபத்து சம்பவம்

தாயும் தந்தையும் இரண்டு பிள்ளைகளுமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீதே இவ்வாறு மரக்கிளை ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளானவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தந்தை உயிரிழந்துள்ளார்.

இதேவேளை காயமடைந்த தாயும் மகளும் மகனும் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version