வான் சாரதியின் நித்திரை கலக்கத்தால் ஏற்பட்ட கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த தந்தை சம்பவ இடத்தில் பலியானதுடன் மகள் படுகாயமடைந்துள்ளார்.
கொழும்பு(colombo) – சிலாபம் பிரதான வீதியில் மஹா வெவ நகருக்கு அருகில் இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பம்பல பிரதேசத்தைச் சேர்ந்த ஜூட் நிரோஷன் (வயது 50) உயிரிழந்துள்ளதுடன் 24 வயதுடைய மகள் காயமடைந்த நிலையில் மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
உறவினர் வீட்டில் இருந்து திரும்பிய வேளை துயர சம்பவம்
மகளுடன் உறவினர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய வேளை இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான வான் அரச நிறுவனமொன்றுக்கு சொந்தமானது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினர் விசாரணை
சாரதியின் நித்திரை கலக்கத்தால் வான், வீதியை விட்டு விலகி, எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது பாய்ந்து வீதியின் ஓரத்தில் இருந்த கட்டிடத்தில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தொடுவாவ காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.