Home இலங்கை சமூகம் மது போதையில் கைகலப்பு! 4 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

மது போதையில் கைகலப்பு! 4 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

0

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம்,  இன்று (15.03.2025) பிரதேசத்தில் உள்ள வயல் பகுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆரம்பக்கட்ட விசாரணை

நேற்று(14.03.2025)
அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அங்குள்ள வயல் பகுதியில் வைத்து மதுபானம்அருந்திக்
கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவ்வாறு மது அருந்திக் கொண்டிருந்தவர்களிடையே
தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போதே தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின்
ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 46 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான ந.புவனேந்திரராசா
என்பவதே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரின் மரணம்
தொடர்பில் அவருடன் மது அருந்திக் கொண்டிருந்த 3 பேரை பொலிஸார் சந்தேகத்தின்
பெயரில் கைதுசெய்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version