யாழ்ப்பாணம் – கோப்பாய் காவல்துறை பிரதேசத்துக்குட்பட்ட இருபாலை மடத்தடி பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது, நேற்றுமுன்தினம்(13) இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாய் தர்க்கத்தின் விளைவாக இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதேவேளை, கொலை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் குறித்து கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
