Home இலங்கை குற்றம் வெளிநாட்டிலுள்ள மனைவியை பழிவாங்க இலங்கையிலுள்ள தந்தை செய்த கொடூரம்

வெளிநாட்டிலுள்ள மனைவியை பழிவாங்க இலங்கையிலுள்ள தந்தை செய்த கொடூரம்

0

குவைத்தில் வீட்டு பணிப்பெண்ணாக பணிபுரியும் தனது மனைவிக்கு வீடியோ அழைப்பேற்படுத்தி தனது 11 வயது மகனை தரையில் மண்டியிட வைத்து, கொடுமைப்படுத்திய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தகாத வார்த்தைகளினால் திட்டி அம்மாவை வேண்டாம் என கூறுமாறு மகனை தந்தை கட்டாயப்படுத்தியுள்ளார்.

பின்னர் மகனின் கைகள், கால்கள் மற்றும் முதுகில் மரக்கட்டையால் தாக்கி காயங்களை ஏற்படுத்தியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட தந்தை அனுராதபுரம் தலைமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் தாய்

கைது செய்யப்பட்ட நபர் அனுராதபுரத்தை சேர்ந்த 35 வயதுடைய மின்சார ஊழியர் என தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் தாய் ஜனவரி மாதம் பணிக்காக குவைத் சென்றிருந்தார்.

சந்தேக நபரான தந்தை அதிகாலை ஒரு மணியளவில் மகனை எழுப்பி, இவ்வாறு கொடுமைப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகன் கடுமையாக தாக்கப்படும் போது அதனை வீடியோ அழைப்பில் மனைவி பார்க்கும் வீடியோ ஒன்று கையடக்க தொலைபேசியில் காணப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version