Home உலகம் ட்ரம்பின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் வீட்டில் FBI சோதனை

ட்ரம்பின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் வீட்டில் FBI சோதனை

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனின் (John Bolton) வீடு மற்றும் அலுவலகங்களில் FBI சோதனையில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க அரசாங்கத்தின் இரகசிய ஆவணங்கள், FBI பறிமுதல் செய்த ஆதாரங்களைச் சேமித்து வைத்திருந்ததாகக் கூறியே மத்தியப் புலனாய்வு அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.

“யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. FBI முகவர்கள் பணியில் உள்ளனர்” என FBI இயக்குனர் காஷ் படேல் X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மோசமான விளைவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் (John Bolton), இந்தியா மீதான ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கையைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதார அழுத்தத்தை உருவாக்க இந்தியாவுக்கு ட்ரம்ப், 50 சதவீத வரி விதித்தது, அமெரிக்காவுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்திருந்தார்.

ட்ரம்பின் இத்தகைய செயல்கள் நம் நாட்டை ஆபத்தில் ஆழ்த்துகின்றன என்றும் ஜோன் போல்டன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஜான் போல்டனின் மேரிலாந்தின் வீட்டில் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) முகவர்கள் சோதனை நடத்தியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version