டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) மீது நடத்தப்பட்ட படுகொலை முயற்சி மற்றும் தாக்குதல் நடத்திய நபர் தொடர்பில் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ (FBI) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய நபர், பொதுக்கூட்டம் நடந்த இடத்தின் அருகில் இருந்த உயரமான பகுதியிலிருந்து பிரசார மேடையை நோக்கி பலமுறை சுட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தத் தாக்குதலில் பார்வையாளர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
எஃப்.பி.ஐ விசாரணை
தாக்குதல் நடத்திய நபரை இரகசிய சேவை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
تیراندازی در سخنرانی انتخاباتی ترامپ، از نمایPOV عکاس واشنگتنپست#Trump pic.twitter.com/dpkzLeLiAq
— Demis.???? #KingRezaPahlavi???? (@farashgardii02) July 14, 2024
மேலும், காயமடைந்த டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகளால் அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தற்போது பாதுகாப்பாக உள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எஃப்.பி.ஐ மேற்கொள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது.