Home இலங்கை சமூகம் நல்லூர் தேருக்கு சென்றவர்கள் வீட்டை நாசப்படுத்திய வன்முறை கும்பல்!

நல்லூர் தேருக்கு சென்றவர்கள் வீட்டை நாசப்படுத்திய வன்முறை கும்பல்!

0

நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் அதிகாலை வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த தளபாடங்களை தீ வைத்துள்ளது.

நல்லூர் ஆலயத்திற்கு 500 மீற்றர் தூரத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் குடும்பத்தினர், இன்றைய தினம் நல்லூர் தேர் திருவிழாவிற்கு சென்ற சமயம்,
வீட்டினுள் அத்துமீறி நுழைந்த குழுவினர் வீட்டின் வரவேற்பறையில் காணப்பட்ட தளபாடங்களுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

வீட்டில் இருந்து பெரும் புகை வருவதை அவதானித்த ஆலயத்திற்கு சென்றவர்கள், அயலவர்களுக்கு அறிவித்தது தீயினை அணைத்துள்ளனர்.

 

காவல்துறை விசாரணை

அதன் பின்னரே சம்பவத்தை அறிந்து ஆலயத்திற்கு சென்ற வீட்டாரும் வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா

NO COMMENTS

Exit mobile version