Home இலங்கை சமூகம் கொழும்பு BOC தலைமையகத்தில் தீ விபத்து

கொழும்பு BOC தலைமையகத்தில் தீ விபத்து

0

கொழும்பு (Colombo) – கோட்டையில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தலைமையகத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

இலங்கை வங்கி (BOC) தலைமையகத்தின் ஐந்தாவது மாடியில் நேற்றிரவு 8.30 மணியளவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தின் போது ஐந்தாவது மாடியில் ஊழியர்கள் சிலர் பணியாற்றிக் கொண்டிருந்த போதும் எதுவித காயங்களும் இன்றி அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம்

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட தீயணைப்புப் படையினர் களத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில் சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version