இரத்தினபுரியில் உள்ள வெலிகெபொல மற்றும் பலாங்கொட பிரதேச செயலகங்களின்
எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொங்கஸ்தென்ன கிராம அலுவலர் பிரிவில் உள்ள வனப் பாதுகாப்புத் துறைக்குச்
சொந்தமான பிரதேசத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ
மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக கபுகல இராணுவ முகாம் மற்றும்
வனத்துறை அதிகாரிகளின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
