Home இலங்கை சமூகம் கொழும்பு நோக்கி சென்ற விரைவு தொடருந்தில் தீ விபத்து

கொழும்பு நோக்கி சென்ற விரைவு தொடருந்தில் தீ விபத்து

0

களுத்துறையில் இருந்து கொழும்பு, மருதானை நோக்கி செல்லும் விரைவு தொடருந்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

ரயிலின் பின் எஞ்சின் ஒரு பகுதியில் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்

தீ விபத்து

தீயினால் இயந்திரம் பாரியளவில் சேதமடையவில்லை, தற்போது தொடருந்து தெற்கு களுத்துறை நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தீப்பற்றிய தொடருந்தில் பயணித்த பயணிகள் மற்றுமொரு தொடருந்து மூலம் மருதானை தொடருந்து நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

Source: https://tamilwin.com/article/fire-in-maradana-train-in-this-morning-1728960519

NO COMMENTS

Exit mobile version