Home உலகம் இந்தோனேசியாவில் பயணிகளுடன் பற்றி எரியும் கப்பல்: பதற வைக்கும் காணொளி!

இந்தோனேசியாவில் பயணிகளுடன் பற்றி எரியும் கப்பல்: பதற வைக்கும் காணொளி!

0

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் ஒரு பயணிகள் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கான பயணிகள் வெளியேற்றப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கே.எம். பார்சிலோனா 5 என்ற கப்பல் மனாடோ கடற்கரையில் இவ்வாறு தீப்பிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட கணொளிகளில் பீதியடைந்த பயணிகள் தண்ணீரில் குதிப்பதையும், மற்றவர்கள் கப்பலுக்குள் சிக்கியிருப்பதையும் காட்டுகின்றன.

உயிரிழப்புகள் 

இந்த நிலையில், காயங்கள் அல்லது இறப்புகளின் எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என கூறப்படுகிறது.

மேலும், இந்தோனேசிய அதிகாரிகள் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version