Home இலங்கை சமூகம் யாழ். வடமராட்சியில் கட்டுமரம் கவிழ்ந்தது கடற்றொழிலாளி பலி

யாழ். வடமராட்சியில் கட்டுமரம் கவிழ்ந்தது கடற்றொழிலாளி பலி

0

யாழ். (jaffna) வடமராட்சி கடலில் கட்டுமரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்றொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தும்பளை லூதர் மாத கோயிலடியைச் சேர்ந்த திருச்செல்வம் ஞானப்பிரகாசம் (வயது 69)
என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

உடற்கூற்றுப் பரிசோதனை

தனது கட்டுமரத்தில் கடற்றொழிலுக்காகக் கடலுக்குள் சென்ற வேளை கட்டுமரம் கடலில்
கவிழ்ந்ததில் அவர் கடலில் மூழ்கிச் உயிரிழந்துள்ளார்.

சடலம் சக தொழிலாளிகளால் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் (Base Hospital, Point Pedro) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/fisherman-dies-after-boat-overturns-in-jaffna-1728386239

NO COMMENTS

Exit mobile version